சுவிற்ஸர்லாந்தில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ் ; 6 பேர் உயிரிழப்பு ; 5 பேர் படுகாயம்
சுவிற்ஸர்லாந்தின் fribourg மாகாணத்தில் ( Chiètres (FR) நகரில் 11 பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்து தொடர்பில் தகவலறிந்து குறித்த இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பஸ்ஸில் முழுவதுமாக பரவியிருந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ வேகமாக பரவியதில் பஸ் முழுவதுமாக எரிந்துள்ளமை தெரியவருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!