news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சூப்பர் 8 சுற்றில் ஹாரி புரூக் அதிரடி சதம்: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து"

24 Feb, 2026
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியின் தமது முதற் போட்டியில் இலங்கையை ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த பாகிஸ்தானுக்கெதிரான போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது. :டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டும், ஜோப்ர ஆர்ச்சர், ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. 35 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தவித்த இங்கிலாந்து அணிக்கு தனி ஆளாகப் போராடி சதமடித்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார் ஹாரி புரூக்.பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!