news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சூர்யா – ஜோதிகா குழந்தைகள் புதிய புகைப்படங்கள் வைரல்: தந்தை, தாயை விட உயரமாக வளர்ந்த தேவ் & தியா!

27 Nov, 2025
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடிகளான சூர்யா – ஜோதிகா தம்பதிகளின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இந்த ஜோடிக்கு, தியா (மகள்), தேவ் (மகன்) என இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது மும்பையில் கல்வி கற்றுவருகின்றனர். சமீபத்தில் சூர்யா, கார்த்தி குடும்பங்கள் கலந்து கொண்ட ஒரு குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சூர்யாவின் மகன் தேவ் தந்தையின் தோளுக்கு மேல் உயரமாக வளர்ந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், மகள் தியா, தன்னுடைய தாயார் ஜோதிகாவை போல் உயரம், தோற்றத்தில் மேலும் அழகாக வளர்ந்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகின்றன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!