உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
சட்டக் கல்வி இயக்குநர் செய்திக்குறிப்பு
"ராகிங் கொடுமையால் சட்டக்கல்லூரி மாணவி கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு காரணமானவர்களை தண்டிப்பதோடு கவிப்பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி.
காவல் நிலையம்
இரண்டு புகார்கள்
சட்டக்கல்லூரி மாணவி ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்வித்துறை சார்ந்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் பெற்றோர் தரப்பில் இருந்து 2 புகார்கள் கொடுத்திருக்கிறார்கள்.
மருத்துவமனை
முதல் புகாரில் மாணவி பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்றும், மற்றொரு புகாரில் மாணவி தற்கொலைக்கு ராகிங்தான் காரணமா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார்களின் மீது முறைப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக கவிப்பிரியாவின் உடற்கூராய்வில் பாலியல் தொந்தரவு நடந்ததற்கான உடல் ரீதியான அறிகுறி ஏதும் இல்லை.
மேலும் 100% தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இரண்டாவதாக ராகிங் புகார் குறித்து காவலர்கள் விசாரிப்பதை விட கல்வியாளர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படும் குழுவினர் விசாரிப்பதே மிகச் சிறப்பாக இருக்கும்.
அதை மாவட்ட ஆட்சியர் மூலம் அமைக்கப்பட்ட கல்வித் துறை சார்ந்த குழு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு கல்வி குழுவில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கௌரி ரமேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உடன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறைக்கும் கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரப்படும் என சட்டக் கல்வி இயக்குநர் விடுத்த செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!