உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
மேலும், கைதுசெய்யப்பட்டவரின் உடல் நலம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க அமலாக்கத் துறைக்கு சுதந்திரம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை முடிவடைந்து, அதற்குப் பிந்தைய கண்காணிப்பில் இருப்பதாகக் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆட்கொணர்வு மனுவை ஏற்கலாமா, மருத்துவ சிகிச்சையில் உள்ள நாட்களை கைது செய்யப்பட்ட நாட்களாக கருதாமல் இருக்க வேண்டுமா ஆகிய விவகாரங்களை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22ஆம் தேதி விசாரிக்கிறது.
ஆகவே இந்த மனுவை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதைக் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளிவைக்கக் கோரக்கூடாது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் கூறப்பட்ட விஷயங்களோ, உச்ச நீதிமன்றம் தற்போது விவாதத்தின் போது தெரிவித்த கருத்துகளோ அந்த வழக்கின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது. தகுதியின் அடிப்படையிலேயே அந்த வழக்கை விசாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி
தமிழ்நாட்டின் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவர் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தபோது, பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஜூன் 13ஆம் தேதியன்று அமலாக்கத் துறை கைதுசெய்தது.
அவர் கைதுசெய்யப்பட்ட விதத்தை எதிர்த்தும் அவரைத் தனியார் மருத்துவமனையான காவிரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று கோரியும் அவரது குடும்பத்தினர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. ஆனால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற ஒப்புக் கொண்டது.
ஜூன் 13ஆம் தேதியன்று செந்தில் பாலாஜியின் வீடு அலுவலகங்களில் நடந்த சோதனைக்குப் பிறகு அவரைக் கைது செய்ததாக அறிவித்தது அமலாக்கத் துறை. 2011-16ல்அ.தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முறைகேடுகள் இருக்கலாம் எனத் தோன்றுவதால், புதிதாக விசாரணை நடத்த கடந்த நவம்பரில் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறையின் விசாரணைக்கும் தடை விதித்தது. இதையடுத்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைக்குத் தடை விதித்தது. ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கை விசாரிக்க அனுமதியும் அளித்தது.
செந்தில் பாலாஜியின் உடல்நிலை
அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட பிறகு தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜி முதலில் அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவைப் பெற்று காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது இதயத்தில் இருந்த அடைப்புகளுக்கு இன்று காலை நான்கு மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு நான்கு வால்வுகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறுவை சிகிச்சையை மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர். ரகுராம் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக என்ன?
"அறுவை சிகிச்சையை காரணம் காட்டி அவர் மேலும் சில மாதங்கள் ஓய்வைக் கோரலாம். அதற்குப் பிறகு கைதானாலும்கூட, பிணையில் வெளிவந்த பிறகு அவர் அமைச்சராகவே தொடர முடியும்.
அமலாக்கத் துறை வழக்குகளை நடத்தும் விதத்தைப் பார்க்கும்போது, இந்த வழக்கு அவ்வளவு சீக்கிரம் முடியாது.
அதுவரை அவரது அரசியல் எதிர்காலத்திற்குப் பாதிப்பில்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால், கட்சியும் மு.க. ஸ்டாலினும் அவர் பின்னால் இருக்கும்வரை, அவருக்கு பாதிப்பு இருக்காது.
கட்சி தன்னை கைவிடும்வகையில் செந்தில் பாலாஜி நடந்துகொள்ளாதவரை இது நீடிக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணை மீண்டும் நாளை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெறவுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்தும் அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களை கைதுசெய்யப்பட்ட நாட்களாக கருத வேண்டுமா என்பது குறித்தும் நாளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!