உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
திருநங்கை அபர்னா
இதையடுத்து சிமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு நான்கு திருநங்கைகள் ஓடும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 திருநங்கைகள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரித்தபோதுதான் திருநங்கை சிமியை அபர்ணா (27), ஆனந்தி (35), ரதி (36), அபி (32) ஆகிய நான்கு திருநங்கைகளும் இணைந்து கொடூரமாகக் கொலைசெய்தது தெரியவந்தது. அதனால் அவர்களை சிமி கொலை வழக்கில் கைதுசெய்தோம்.
கொலைசெய்யப்பட்ட திருநங்கை சிமி
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, இவர்கள் அனைவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
அப்போது அவர்களில் சிமியை மட்டும் சிலர் விரும்பி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதனால் சிமிக்கும் மற்ற திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
முன்விரோதமும் இருந்து வந்திருக்கிறது. சம்பவத்தன்று சிமியை மற்ற திருநங்கைகள் கொடூரமாகக் கொலைசெய்து, முட்புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
அதனால்தான் சிமியின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டிருக்கிறது. தொழில் போட்டி காரணமாகத்தான் சிமி கொலைசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!