உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
வெற்றியும், நந்தினியும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலில் விழுந்த விரிசலே நந்தினியின் உயிரை பறித்து உள்ளது.
மதுரை கீழவாசல் லட்சுமி புரத்தை சேர்ந்த வெற்றியும், நந்தினியும் ஒன்றாக 10-ம் வகுப்பு படித்துள்ளனர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி காதலை வளர்த்து உள்ளனர்.
இந்த நிலையில்தான் வெற்றியின் உடல் மொழி மற்றும் பேச்சில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கையாக மாறியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி வெற்றியிடமிருந்து விலகிச் சென்று உள்ளார்.உனக்கும் எனக்கும் சரி வராது. நாம் பிரிந்து விடுவோம் என்று கூறி விட்டு நந்தினி பேசுவதையும் தவிர்த்து உள்ளார்.
இதன்பிறகு நந்தினி, ராகுல் என்கிற வாலிபருடன் நட்பாக பழகி உள்ளார். இது வெற்றிக்கு தெரியவந்தது. அவர் நந்தினியை கண்டித்து உள்ளார். ஆனால் நந்தினியோ அதனை கண்டு கொள்ளாமல் இருந்து உள்ளார்.இது வெற்றிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அதனை காட்டிக் கொள்ளாமல், நாம் நண்பர்கள் போல பேசிக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனை வெகுளிப்பெண்ணான நந்தினியும் நம்பியுள்ளார்.
இந்த நிலையில் நந்தினிக்கு நேற்று பிறந்தநாள் வந்துள்ளது. காலையிலேயே வெற்றி, நந்தினியை போனில் தொடர்பு கொண்டு நல்லவன்போல வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னோடு பொழுதை கழித்தால் சந்தோஷப்படுவேன். உனக்கு புத்தாடை எடுத்து தருகிறேன் என்றெல்லாம் பேசி நந்தினியிடம் வெற்றி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நந்தினியை நேற்று காலையில் சந்தித்த வெற்றி மோட்டார் சைக்கிளில் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். புதிய துணி வாங்கி கொடுத்து விட்டு ஆசிரமம் ஒன்றிற்கும் அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர் மாலை 6 மணி அளவில் தாழம்பூர் பகுதிக்கு நந்தினியை அழைத்துச் சென்ற வெற்றி, இருவரும் உடலில் சங்கிலியை கட்டி விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.
முதலில் உன் மீது சங்கிலியை சுற்றி ஒரு போட்டோ எடுப்போம். அது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அப்போதும் வெகுளியாகவே இருந்த நந்தினி, தனது உயிர்போகப் போகிறது என்பது தெரியாமல் அதற்கும் தலையாட்டி இருக்கிறார்.
அப்போதுதான் வெற்றி தனது ஆத்திரம், கோபம் அனைத்தையும் நந்தினியின் மீது வெறித்தனமாக காட்டி மிருகமாக மாறி இருக்கிறார். சங்கிலியால் கை, கால்களை கட்டி, காலி இடத்துக்கு தூக்கிச் சென்ற வெற்றி, கழுத்து, கை, கால் உள்ளிட்ட 5 இடங்களில் முதலில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.இதில் வலி தாங்க முடியாமல் நந்தினி அலறி துடித்துள்ளார்.
அப்போதும் ஈவு இரக்கமின்றி தான் வாங்கி வந்திருந்த பெட்ரோலை எடுத்து நந்தினியின் மீது ஊற்றி உயிருடன் தீ வைத்துள்ளார். இதில்தான் அப்பாவி பெண்ணான நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த கொடூர கொலை சம்பவம் தாழம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!