news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செப்டெம்பர் மாதத்தில் முதல் 25 நாட்களில் 99,955 சுற்றுலாப் பயணிகள் வருகை

28 Sep, 2024
செப்டெம்பர் மாதத்தின் முதல் 25 நாட்களில் 99,955 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 21,607 ஆகும். மேலும், பிரித்தானியாவிலிருந்து 7,496 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 6,651 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 6,640 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 14 இலட்சத்து 62 ஆயிரத்து 623 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!