news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சேலைகளால் மட்டும் அமைக்கப்படும் “விசித்திரமான அம்மன் தேர்”

05 May, 2016

மலை­யக மக்கள் இலங்­கைக்கு சுமார் 200 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து இரா­மேஸ்­வரம் ஊடாக பட­கு­மூலம் பாக்கு நீரி­ணை­யைக்­ க­டந்து  மன்­னாரை வந்­த­டைந்து,  அங்­கி­ருந்து மலை­யக பகு­தி­க­ளுக்கு நடந்து வந்­தனர்.

வரும் வழியில் சில­ருக்கு அம்மை நோய் ஏற்­பட்­டுள்­ளது. அச்­சந்­தர்ப்­பத்தில் காடு­களில் அம்­ம­னுக்கு சிறிய கோயில்­களை அமைத்து வழி­பட்டு தங்கள் பய­ணங்­களை தொடர்ந்­தனர். சில­ருக்கு வருத்தம் அதி­க­ரித்தால் இடையே விட்­டு­விட்டு வந்­து­வி­டு­வார்­களாம்.

அம்­ம­னின்மேல் அவர்கள் வைத்த நம்­பிக்­கையால் அம்மை நோய் குண­ம­டைந்து பின்னால் வரும் கூட்­டத்­துடன் மலை­ய­கத்­திற்­கான பய­ணத்தை தொடர்ந்­துள்­ள­தாக வர­லாற்றுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்­தி­லேயே மாத்­த­ளையில் உள்ள அம்மன் கோயில் உரு­வா­ன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மன்னார் வழி­யாக தம்­புள்ள, மாத்­தளை வந்­த­டைந்து மக்கள் தங்கி இருந்த இடமே மாத்­தளை கோயில் என்றும் அப்­போது அங்கு மரத்தின் அடியில் அம்­மனை வைத்து வழி­பட்டு வந்­த­தா­கவும் தக­வல்கள் கூறு­கின்­றன.

அந்த மரம் தற்­போதும் மாத்­தளை ஆல­யத்தில் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது.

அம்மன் வழி­பாட்டில் மலை­யக மக்­களின் வாழ்­வி­ய­லுக்கு நெருங்­கிய தொடர்­புகள் காணப்­ப­டு­கின்­றன.

அதன் கார­ண­மா­கவே தோட்­டங்­கள்­தோறும் அம்மன் ஆல­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அம்மன் 1008 அவ­தா­ரங்­களைக் கொண்­ட­வ­ராக போற்­றப்­பட்­டாலும், இந்த 1008 அவ­தா­ரங்­களில் பக்­தர்­களின் வழி­பாட்­டிற்­கேற்ப அந்த அவ­தா­ரங்கள் அமைந்­துள்­ளன.

இவை ஒவ்­வொன்றும் வித்­தி­யா­ச­மான வழி­பாட்டு முறை­யாகும். இதில் பத்­தி­ர­காளி அம்மன் வழி­பாடு அனை­வ­ரையும் ஒரு கணம் மெய்­சி­லிர்க்க வைக்­கின்­றது. சிலர் இத் தெய்­வத்­திற்கு கோழி, ஆடு போன்­ற­வற்றைப் பலி கொடுக்­கின்­றனர்.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் இன்று மலை­ய­கத்தில் பெரும்­பா­லான இடங்­களில் நடை­பெ­று­கின்­றன.

இவ்­வா­றான  அம்மன் வழி­பா­டு­களில் மிகவும் சிந்­திக்கக் கூடி­ய­வ­கையில் ஒன்­றாக லிந்­துலை, சென்­றெ­குலர்ஸ் தோட்­டத்தில் ஸ்ரீ முத்து மாரி­யம்மன் ஆல­யத்தில் வரு­டாந்தம் இடம்­பெற்­று­வரும் தேர்த் திரு­வி­ழாவைக் குறிப்­பி­டலாம்.

MM-2_1461472468212

இந்தத் திரு­வி­ழா­வை­யொட்டி அமைக்­கப்­படும் தேர் பெண்கள் அணியும் 'சேலை­களை' கொண்டு அமைக்­கப்­ப­டு­கி­றது. இந்த “சேலைத்தேர்” பலரும் அறி­யாத ஒரு விட­ய­மா­கவே உள்­ளது.

சேலைத்தேர் என்­பது முழுதும் சேலை­களால் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும்.  அந்தத் தோட்­டத்தில்  வாழ்ந்த கருப்­பண்ணன் என்ற தொழிலாளி ஒரு­வ­ரினால் 1932 ஆம் ஆண்­ட­ளவில் இந்தத் தேர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் கைக்­கத்தி (கவ்­வாத்­துக்­கத்தி) என்று சொல்லக் கூடிய கத்­தி­யி­லேயே இதனை வடி­வ­மைத்­துள்ளார்.

தமிழ்­நாட்டின் (தென்­னிந்­தியா) நாமக்கல் பிர­தே­சத்தில் இவ்­வ­கை­யான சேலைத்தேர் “நாமக்கல்” தேர் என்றே அழைக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தத் தோட்­டத்தில் வாழும் பெரும்­பா­லான மக்கள் இந்­தி­யாவில் பெரம்­பத்தூர் மற்றும் நாமக்கல் பிர­தே­சங்­களில் இருந்து இலங்கைக்கு வந்­துள்­ள­வர்­க­ளாவர்.

அதனால் அந்த பிர­தேச பண்­பாடு, சமய வாழ்க்­கை­முறை மற்றும் கலா­சா­ரங்­களை இங்கும் பின்­பற்­றி­வ­ரு­கின்­றனர்.

இந்தத் தோட்­டத்தில் வாழும் பெண் வரு­டத்தில் முதன்­மு­த­லாக கொள்­வ­னவு செய்யும் சேலையை அம்மன் கோயி­லுக்கு ஒதுக்கி விடுவார்­களாம்.

அந்தத் தோட்­டத்தில் 300 பெண்கள் இருந்தால் கிட்­டத்­தட்ட 200 க்கும் மேற்­பட்ட சேலைகள் ஆல­யத்தை வந்­த­டை­கின்­ற­னவாம்.

பின்னர் சேலை­களை வழங்­கி­ய­வர்­களின் பெயர்­கள்­பற்றி அவற்­றுக்கு அடை­யா­ள­மி­டப்­ப­டு­கின்­றன. அந்த சேலை­க­ளினால் தேரை அலங்­க­ரிக்­கின்­றனர்.

முற்­றிலும் வண்ண வண்ண சேலை­களின் மூலம் இந்தத் தேர் அலங்­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. ஆணிகள் பாவிக்­கப்­ப­டு­வ­தில்லை.

சனல்­க­ளி­னா­லேயே கட்­டப்­ப­டு­கின்­றது.

MM-3_1461472465465

தேரின் தூண்­க­ளுக்கு வர்ண பூச்­சுக்கள் பூசப்­ப­டு­வ­தில்லை. இந்தத் தேரில் அம்மன் சிலை வைக்­கப்­பட்டு பக்­தர்கள் புடை­சூழ வீதி­உலா இடம்­பெ­று­கி­றது.

ஆனால், தற்­போது ட்ரக்டர் வண்டி மூலம் தேர் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது. விழா முடி­வுற்­றதும் இந்த சேலைகள் குறித்த அதன் உரி­மை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கின்­றது.

MM-1_1461472468760இந்த சேலையை பெண்கள் மிக முக்கியமான காரியங்களின்போதும், வைபவங்களின்போதும் அணிவர். அம்மன் தேருக்கு பாவித்த சேலையை உடுத்தும்போது பெண்களின் மனதில் பயபக்தியும், ஒழுக்கமும், தீய செயல்களை தவிர்த்து மனப்பக்குவம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்ற வழிபாட்டுமுறை மலையகத்தில் மேற்படி தோட்டத்தில் மாத்திரமே இடம் பெற்று வருகிறது. இதன் காரணமாகவே ஏனைய மலையக தோட்டபுறங்களுக்கு இவ்வாறு ஒரு சேலைத்தேர் இருப்பது தெரியவில்லை.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!