news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் கட்சியினர்

17 Jun, 2020
ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை அறிக்கைக்கு அமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை காட்டியமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள் அல்லது சுயாதீன வேட்பாளர்கள் உட்பட எவரும் தனது பெயர், பதவி புகைப்படத்தை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய விரும்பவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து ஜனாதிபதியின் கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!