ஜனாதிபதி இணக்கம்: இரத்மலானை – மட்டக்களப்புக்கான உள்நாட்டு விமான சேவை மீண்டும் ஆரம்பம்
இரத்மலானையிலிருந்து மட்டக்களப்புக்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் தொடங்க ஜனாதிபதி இணக்கம் வழங்கியுள்ளார்.
முகப்பு செய்திகள்
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, இந்த இணக்கம் வெளியிடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
மேலும், பாலையடிவட்டை கிராமத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக் கொண்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 12 பேர்ச் காணிகள் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
எனினும், இது போதுமானதல்ல எனவே முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியையும், மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!