news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதி ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்

01 Oct, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.    

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!