news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் 18 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

22 Jul, 2022
- பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுகள் - ஜீ.எல். வகித்த வெளிவிவகார அமைச்சு அலி சப்ரிக்கு இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (22) பிற்பகல் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில், பெரும்பாலானோருக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுகளே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், ஏற்கனவே ஜீ.எல். பீரிஸ் வகித்த வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 1. பிரதமர் தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் 2. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர் 3. கலாநிதி சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர் 4. பந்துல குணவர்தன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் 5. கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் 6. மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் 7. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ - நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு  மறுசீரமைப்பு அமைச்சர் 8. ஹரின் பெனாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் 9. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் 10. பிரசன்ன ரணதுங்க -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு 11. எம்.யூ.எம். அலி சப்ரி - வெளிவிவகாரம் 12. விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் 13. கஞ்சன விஜேசேகர - மின்சக்தி மற்றும் வலுசக்தி 14. அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர் 15. ரொஷான் ரணசிங்க - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் 16. மனூஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் 17. டிரான் அளஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 18. நளின் பெனாண்டோ - வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!