தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தமிழ்ப் பிரதிநிதிகள் செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஆனால் தமிழ் மக்களின் விவகாரத்தை பேசு பொருளாக்கக் கூடிய மேடையாக பாராளுமன்றம் இருக்கின்றது.
இரண்டாவது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஜெனிவாவில் ஆதிக்கநிலையில் உள்ளது.
மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு சற்று சுயாதீனம் இருந்தாலும் அவரும் அவ் ஆதிக்கத்திற்கு மட்டுப்பட்டவர் தான்.
எனவே தமிழ் மக்கள் தொடர்பாக மேற்குலகம் என்ன அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றதோ அதுவே தமிழர் பற்றிய தீர்மானங்களாக இருக்கும்.
இலங்கைத்தீவு பற்றிய விவகாரங்களில் மேற்குலம் இந்தியாவுடன் இணைந்து செல்வதால் மேற்குலக, இந்திய கூட்டு நலன்களே மனித உரிமைகள் பேரவையின் தமிழர் பற்றிய தீர்மானங்களாக இருக்கும் எனக்கூறலாம்.
எனினும் மேற்குலகத்தையும் இந்தியாவையும் கையாள்வதற்கும் தமிழ் மக்களுக்கும் பல பிடிகள் உள்ளன.
அந்தப் பிடிகளை வலுவான இராஜதந்திரத்துடன் கையாள்வதற்குத் தமிழ்த்தரப்பு தயங்கக் கூடாது.
அதில் பிரதானமானது இலங்கைத்தீவை மையமாகக் கொண்ட பூகோள அரசியலும், புவிசார் அரசியலுமாகும்.
பூகோள அரசியல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் இருப்புக்கு அவசியமானது. புவிசார் அரசியல் பிராந்திய வல்லரசான இந்தியாவின் இருப்புக்கு அவசியமானது.
உலகலாவிய வகையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக்கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக கேந்திர மையமாக இருக்கும் இலங்கைத்தீவில் சீனாவின் செல்வாக்கைக்கட்டுப்படுத்த வேண்டும்.
அதற்கு பிரதானமாக துணை புரியப்போவது இலங்கைத்தமிழர்கள் தான். தமிழர்கள் மட்டும் தான் தற்போது இலங்கை ஆட்சி அதிகாரக்கட்டமைப்புக்கு வெளியில் நிற்கின்றனர்.
மேற்குலகம் பெருந்தேசியவாதத்துடன் முரண்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மக்களைத் தனியாக பயணிக்க விடாது தனித்தன்மையைத் துறந்து சிங்கள லிபரல்களுடன் இணைந்து பயணிக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
சுமந்திரன் இதற்காகத் தான் களமிறக்கப்பட்டார். இம்முயற்சி ஒரு போதும் வெற்றிகளைக் கொடுக்கப் போவதில்லை.
இந்தியாவும் பெருந்தேசிவாதத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்காகவே தமிழர்களின் நலன்களை பின்நிலைக்கு தள்ளி சிங்கள லிபரல்கள் மூலம் முன்செல்லலாமென நினைக்கின்றது எனினும் அது தோல்விகளையே ஏற்படுத்தியுள்ளது.
இவற்றை விட புலம்பெயர் மக்கள் மேற்குலகத்தைக் கையாளக்கூடியவர்களாக உள்ளனர்.
தமிழக மக்கள் இந்திய மத்திய அரசைக் கையாளக்கூடியவர்களாக உள்ளனர். இவையும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பிடிகளாகும்.
மூன்றாவது சர்வதேச சமூகம் பல இடைவெளிகள் உள்ளன. சர்வதேச சமூகத்தில் வல்லரசுகள், சிறிய அரசுகள், மனித உரிமைவாதிகள் முற்போக்கு ஜனநாயக சக்திகள், ஊடகவியலாளர்கள் என்பவற்றை உள்ளடக்கிய சர்வதேச சிவில் சமூகம் என்பன உள்ளன.
சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் சர்வதேச சிவில் சமூகம் வலுவான பங்களிப்பை வழங்குகின்றது.
வனமாகக் கையாண்டால் சர்வதேச சிவில் சமூகம் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பாரிய பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருக்கும். சர்வதேச அபிப்பிராயத்தை புறந்தள்ளி வல்லரசுகளினால் பெரியளவிற்கு செயற்பட முடியாது.
நான்காவது புலம்பெயர் மக்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு கிடைத்த மிகப் பெரும் வளமாகும்.
இந்த வளத்தை கவனமாக ஒருங்கிணைத்து உச்ச வகையில் செயற்படுத்த வேண்டும். இன்று தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் சில அடைவுகள் கிடைத்திருக்கின்றது என்றால் அதற்குப்புலம்பெயர் மக்களே காரணமாவார்.
கனடா மத்திய அரசின் இன அழிப்புத் தீர்மானம் இதற்கு நல்ல உதாரணமாகும். ஜெனிவா களத்தையும் கூட சற்றுச்சூடாக வைத்திருப்பவர்கள் புலம் பெயர் மக்களே!
எனவே ஜெனிவா தொடர்பாக தமிழ்த்தரப்பு அதிகம் துவளத்தேவையில்லை.
ஜெனிவா தமிழ் மக்களுக்கு சாதகமாக இன்னமும் வராவிட்டாலும் தமிழத்தரப்பு தொடர்ந்து கதவுகளைத் தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும்.
சீனா இலங்கைத் தீவில் இருந்து அகலும் வரை ஜெனிவா கோவையை மேற்குலகம் மூடப்போவதில்லை. சுருங்கக் கூறின் சடலம் தற்போதைக்கு அடக்கத்திற்கு செல்லாது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!