டயனாவுடன் உறவாம் ! ; சர்ச்சையைக் கிளப்பும் டென்னிஸ் வீரர் (வீடியோ இணைப்பு)
செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரரான ஸ்லோப்டன், தனக்கும் இளவரசி டயானாவுக்கும் இடையே உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
52 வயதான செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஸ்லோப்டன் தெரிவித்துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இளவரசர் சார்ள்ஸுடன் டயானாவுக்கு திருமணமான பின்னரும், இந்த உறவு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செர்பிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 1980களின் இறுதியில், நான் விம்பிள்டனில் விளையாடியபோது அவர் எனது ஆட்டத்தை பார்த்து ரசித்தார்.
1987ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டிக்கு முன்னதாக அவர் என்னுடன் பேசினார். அவர் ஒரு அற்புதமான பெண்.
அவருடன் நான் எதை பற்றி வேண்டுமானாலும் பேச முடிந்தது. சாதாரண எளிய விடயங்களை அவரிடம் பேசினாலும் அதில் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும்.
அவர் தற்போது நம்முடன் இல்லாத காரணத்தால் நான் அவரை பற்றி விரிவாக பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!