ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!
18 Oct, 2026
இளவரசி டயானாவின் நகைகள் சிலவற்றை, இளவரசர் வில்லியமின் மனைவி அணிந்திருந்தாலும் கூட, தனது சகோதரரின் மனைவியாகப் போகும் நபர் அணிய அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது அரச குடும்ப பதவியைப் பொருத்து இது கொண்டுவரப்பட வேண்டும் என்று ராணி எலிசபெத்திடம் வில்லியம் உறுதிமொழி வாங்கிக்கொண்டதாகவும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாம். .
அரச குடும்பத்துக்குள் மேஹன் நுழைவதற்கு முன்பே, வில்லியம் - ஹாரி உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும், ஹாரி - மேஹன் இடையேயான நட்பு வேகமாக வளர்வதைக் கண்டு வில்லியம் தம்பதி கவலை அடைந்ததாகவும், அவர்களை சந்திக்க ஹாரி, அமெரிக்க முன்னாள் நடிகையான மேஹனை அழைத்துவந்போது அவர்களுக்குள் இருந்த விரிசல் மேலும் மோசமானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஹாரி வெளியிட்ட புத்தகத்தில், வில்லியம் தன்னை நேரடியாக தாக்கி கீழே தள்ளியதாக தெரிவித்திருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டிருந்தது.
மேலும் அந்தப் புத்தகத்தில், ஒரு முறை மேஹன் தனது உதட்டுச் சாயத்தை மறந்துவிட்டு வந்தபோது, அதனை கேத் மிடில்டனிடம் கேட்கச் சொன்னதாகவும், அப்போது, கேத் அதிர்ச்சியடைந்து,
ஆனாலும் ஒருவழியாக சமாளித்துக்கொண்டு உதட்டுச் சாயத்தைக் கொடுத்ததாகவும், அப்போது மேஹன் அதில் தனது விரலால் தடவி உதட்டில் பூசிக்கொண்டதைப் பார்த்த கேத் முகம் சுளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அரச குடும்பத்தில் நடந்த தகவல்களைப் பற்றி பேசிய, ஹாரியின் புத்தகம் ஸ்பேர் வெளியான போது உலகமே கடும் அதிர்ச்சியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!