ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
அமெரிக்காவில் லியோ திரைப்படம் பிரதியங்கரா சினிமாஸ் (Prathyangira Cinemas) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. வார இறுதியில் இத்திரைப்படம் அமெரிக்காவில் 2.1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் அஹிம்ஸா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அங்கு முதல் மூன்று நாளில் 1.07 மில்லியன் பவுண்ட்களை வசூலித்துள்ளது.
காம்ஸ்கோர் (Comscore) மதிப்பீடுகளின் படி வார இறுதியில் லியோ திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் அடிப்படையில் 31.2 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளையில் படம் வெளியாகி 4 நாட்களான நிலையில் உலகளவில் 48.5 மில்லியன் டாலர்களை லியோ வசூலித்துள்ளது. இது டிகாப்ரியோ நடிப்பில் வெளியான Killers of the Flower Moon திரைப்படத்தின் வசூலை விட அதிகம்.
அக்டோப்ர் 20 ஆம் தேதி வெளியான Killers of the Flower Moon திரைப்படம் அக்டோபர் 22 ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்கா மற்றும் கனடாவில் 23 மில்லியன் டாலர்களையும் மற்ற நாடுகளில் 21 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளது.
மொத்தமாக 44 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது லியோ திரைப்படம். அதே சமயத்தில் Killers of the Flower Moon இந்தியாவில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!