லிபியாவில் ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்தயுக்ரேன்- ஜெலென்ஸ்கி தகவல்
24 Nov, 2026
பிரித்தானியா தனது நிலப்பரப்பை விட்டுக்கொடுப்பது போன்ற முட்டாள்தனமான முடிவுகளால்தான், பாதுகாப்பு கருதி அமெரிக்கா 'கிரீன்லாந்து' (Greenland) போன்ற பகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
சாக்கோஸ் தீவுக்கூட்டம் பல தசாப்தங்களாக பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளம் இயங்கி வருகிறது.
நீண்டகால இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியா அந்தத் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் வழங்கச் சம்மதித்தது.
இருப்பினும், டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவத் தளத்தை அடுத்த 99 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் பிரித்தானியா குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தநிலையில், ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அரச தரப்பு, இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட சிக்கல்களால் இராணுவத் தளத்தின் எதிர்காலத்திற்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே இந்தத் தீர்வு எட்டப்பட்டதாக பிரித்தானிய அரசு விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், பிரித்தானிய எதிர்க்கட்சிகள் பலவும் ட்ரம்ப்பின் கருத்தை ஆதரித்துள்ளதுடன், இந்த ஒப்பந்தம் பிரித்தானியாவின் செல்வாக்கைக் குறைக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!