பிரா தொங்கும் வேலி; இதை பார்க்கவே குவியும் சுற்றுலாப் பயணிகள்: எங்கே இருக்கிறது தெரியுமா?
21 Nov, 2026
டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதிகாரம் யார் வசம் இருந்தது?
வெனிசுவேலா மீதான நடவடிக்கைக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், "அதிகார மாற்றம் பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான முறையில் நடக்கும் வரை" அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும் என்றார்.
"வெனிசுவேலா மக்களின் நலனில் அக்கறை இல்லாத ஒருவர் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றும் அபாயத்தை நாம் எடுக்க முடியாது" என்றும் அவர் கூறினார்.
வெனிசுவேலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், கடந்த வாரம் தான் முறைப்படி நாட்டின் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார்.
முன்னதாக, வெனிசுவேலாவின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவிடம் 5 கோடி பேரல் உயர்தர எண்ணெயை வழங்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இது சந்தை விலையில் விற்கப்படும் என்றும், இதிலிருந்து கிடைக்கும் வருமானம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"இது வெனிசுவேலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அதிபர் என்ற முறையில், இந்த நிதி எனது கட்டுப்பாட்டில் இருக்கும். எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட்டிடம் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துமாறு கூறியுள்ளேன்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
, டெல்சி ரோட்ரிக்ஸ்
நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்று சமீபகாலமாக டொனால்ட் டிரம்ப் வாதிட்டு வருகிறார்.
வெனிசுவேலாவிடம் சுமார் 303 பில்லியன் பேரல் எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பாகக் கருதப்படுகிறது.
ஆனால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து குறைந்து வருகிறது.
டிரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவின் இந்த எண்ணெய் இருப்புகளை பெரிய வாய்ப்பாக கருதுகிறது
இருப்பினும், வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அமெரிக்க நிறுவனங்களுக்குக் கடும் செலவு மிக்கதாக இருக்கலாம்.
தவிர, வெனிசுவேலாவின் எண்ணெய் கனரக கச்சா எண்ணெய் வகையைச் சார்ந்தது, இதைச் சுத்திகரிப்பதும் கடினம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!