இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு
27 Oct, 2026
ஆனால் அமெரிக்கா இந்த நெட்வொர்க்கை 60 நாட்களில் முற்றிலும் சிதைத்துவிட்டது. வெனிசுலா அதிபரை பதவியிலிருந்து நீக்கி, நாடு கடத்தி எண்ணெய் வளங்களையும் கப்பல்களையும் பறிமுதல் செய்தது, மெக்ஸிகோவுக்கு வரி அச்சுறுத்தல் விடுத்தது,
இப்போது ஈரான் மீது போர் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளத்திற்கு மொத்தமாக தடை விதித்ததுள்ளது.
இதனால் சீனாவின் மலிவு எண்ணெய் வழி முழுமையாக மூடப்பட்டுள்ளது. ஆனால் சீனா, அமெரிக்கா இத்தகைய செயலை செய்யும் என்ற எதிர்பார்த்து இருந்தது. இதற்காக சீனா வெளிநாட்டு கச்சா எண்ணெய்யை நம்பியிருக்க கூடாது என முடிவு செய்தது.
இதற்காக கடந்த பத்தாண்டில் கிளீன் எனர்ஜி துறையில் சுமார் 625 பில்லியன் டாலர் முதலீடு செய்தது.
சீனா அரசின் 2030 சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி இலக்குகளை 2024-ல் அதாவது 6 ஆண்டுகள் முன்னதாகவே எட்டியது.
2025-ல் புதிய கார் விற்பனையில் 51% மின்சார வாகனங்கள் ஆகும். சீனாவில் இயங்கும் மொத்த வாகனங்களில் 12% மின்சார வாகனங்கள். 2025ல் சீனாவின் எரிபொருள் விற்பனை 5.7% சரிந்துள்ளது,
இப்படி சீனா கிளீன் எனர்ஜி துறையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து சுயசார்பு நிலையை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாக உள்ளது.
சீனா தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட 40% அதிக மின்சாரம் உற்பத்தி செய்கிறது.
சர்வதேச எரிசக்தி அமைப்பின் படி, சீனாவின் பெட்ரோல்-டீசல் தேவை ஏற்கனவே உச்சத்தை எட்டியுள்ளது.
சூரிய மற்றும் காற்றாலை திறன் 2025 தொடக்கத்தில் முதல் முறையாக நிலக்கரியை முந்தியது.
China's high ambitions for clean energy
எனவே அமெரிக்கா வெனிசுலா, ஈரான் கச்சா எண்ணெய் மீது தடை விதித்தாலும், சீனா தள்ளுபடி விலையில் கிடைக்கும் எண்ணெய்யை மட்டும் தான் இழக்கிறது, எவ்விதமான எரிபொருள் பற்றாக்குறையும் சீனாவுக்கு ஏற்படவில்லை. சீனாவுக்கு தற்போது ரஷ்யா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. இந்தியாவுக்கு இது பெரும் பாடாகமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த தேவையில் சுமார் 85% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். பயணிகள் கார்களில் மின்சார வாகனங்கள் வெறும் 4% மட்டுமே. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள் பின்தங்கியுள்ளன. ரஷ்யாவில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் வாங்கி வந்தாலும் அமெரிக்கா வரி அச்சுறுத்தலால் அதை குறைத்துள்ளோம். ரஷ்யாவுக்கு பதிலாக மத்திய கிழக்கு எண்ணெயை வாங்கி வந்தநிலையில் இப்போது ஈரான் தாக்குதலால் அதுவும் ஆபத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விமான எரிபொருல் விலை உயர்வு மட்டும் அல்லாமல் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு மட்டும் தான் இத்தகைய பிரச்சனையா என்றால் இல்லை, வெளிநாட்டு கச்சா எண்ணெய், எரிவாயு வளத்தை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளுக்கும் இத்தகைய பிரச்சனை உள்ளது. சீனா இரு உத்திகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தியது: இன்று மலிவு எண்ணெய் வாங்குவது, நாளை வெளிநாட்டு கச்சா எண்ணெய் சார்ப்பு இல்லாத எதிர்காலத்தை கட்டமைப்பது. இது தற்போது பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. இதனால் ஈரான் போர் மூலம் பாதிக்கப்படாத நாடுகளில் சீனா முதன்மையாக உள்ளது
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!