நீதி தேவதையின் கண்களை மறைத்தல்...!
16 Oct, 2026
அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃபைச் சந்தித்த புதின்
ரஷ்ய-யுக்ரேன் போரை கவனித்து வருவதாகக் கூறிய டிரம்ப் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
"மூன்றரை ஆண்டுகளாக போர் நடந்து வரும் ஒரு பிராந்தியத்தை பற்றி நாம் பேசுகிறோம். பல ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்." என்றும் தெரிவித்தார்.
இதை மிகவும் சிக்கலானது எனக் குறிப்பிட்ட டிரம்ப், "நாங்கள் சில விஷயங்களை திருப்பி எடுக்கவும், சில விஷயங்களை மாற்றிக் கொள்ளவும் பார்க்கிறோம். இது அவ்வளவு எளிதானதல்ல" என்று கூறினார்.
எனினும், போர் நிறுத்தத்திற்கான தன்னுடைய முன்மொழிவு எவ்வாறு இருக்கும் என டிரம்ப் எந்தத் தகவலும் வழங்கவில்லை.
அதன் படி, ரஷ்யா மேற்கு யுக்ரேனில் உள்ள தொன்பாஸ் பிராந்தியம் மற்றும் க்ரைமியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். அதற்குப் பதிலாக ரஷ்ய ராணுவம் பகுதியளவு கட்டுப்படுத்தி வரும் கெர்சன் மற்றும் ஜபோரிஷியா பிராந்தியங்களை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டும் என சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது.
ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃபை மாஸ்கோவில் சந்தித்ததாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இதே போன்றதொரு ஒப்பந்தத்தைத் தான் புதினும் முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.
அமைதிக்கான நிபந்தனைகளில் புதினும், ஜெலென்ஸ்கியும் பார தூரத்தில் இருக்கின்ற நிலையில் யுக்ரேனும் ஐரோப்பிய கூட்டாளிகளும் இத்தகைய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்வார்களா என்பது தெளிவாக இல்லை. தனது பிரதேசங்களை விட்டுக்கொடுக்கும் முடிவை ஜெலென்ஸ்கி முன்னர் பலமுறை நிராகரித்துள்ளார்.
,
இந்த ஒப்பந்தத்தின் படி ரஷ்யா மேற்கு யுக்ரேனில் உள்ள தொன்பாஸ் பிராந்தியம் மற்றும் க்ரைமியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.
"யுக்ரேனின் பிராந்திய பிரச்னைக்கான தீர்வு அதன் அரசியலமைப்பில் உள்ளது. இதிலிருந்து யாரும் விலகிச் செல்ல மாட்டார்கள், செல்லவும் முடியாது. யுக்ரேனியர்கள், ஆக்கிரமிப்பாளருக்கு தங்களுடைய நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்காள்" என சனிக்கிழமை டெலகிராமில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தார் ஜெலென்ஸ்கி.
"எங்களுக்கு எதிரான, யுக்ரேனை உள்ளடக்காத எந்தத் தீர்வும் அமைதிக்கு எதிரான தீர்வுகளே." எனத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, அமைதியைக் கொண்டு வரும் உண்மையான தீர்வுகளுக்குத் தனது நாடு தயாராக இருப்பதாகக் கூறினார்.
"டிரம்ப் மற்றும் அனைத்து கூட்டாளிகளுடன் இணைந்து உண்மையான, மிக முக்கியமாக நிலைத்த அமைதிக்காக வேலை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த அமைதி ரஷ்யாவின் விருப்பங்களுக்கு ஏற்ப கலைந்துவிடக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது" எனத் தெரிவித்தார் ஜெலென்ஸ்கி.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில் ஜெலென்ஸ்கி ஏதாவதொரு விதத்தில் ஈடுபடுவது இப்போதும் சாத்தியம் தான் என்றும் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது பற்றி வெள்ளை மாளிகையிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.
கடந்த மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரஷ்யாவுடன் சாத்தியம் இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார், "எனக்கு அவரிடம் (புதினுடன்) ஏமாற்றம் தான், ஆனால் நான் விடப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.
சமீப நாட்களில் ரஷ்யாவுக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை கடினமாக்கியுள்ளார் டிரம்ப். யுக்ரேனுடன் ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 8 ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தார். அவ்வாறு நடக்கவில்லையென்றால் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் காலக்கெடு நெருங்குவதற்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான டிரம்ப் - புதின் சந்திப்பு பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது பற்றி வெள்ளை மாளிகையில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை.
யுக்ரேன் போருக்குப் பிறகு முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் டிரம்பும் புதினும் தொலைபேசி மூலமாகப் பேசினார்கள்.
இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார் புதின்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!