இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
யுக்ரேனில் நடந்த போரில், ரஷ்யா தலைநகரான கியேவைக் குறிவைத்து தாக்கியது. அங்கு பல கட்டிடங்கள் ஏவுகணைகளால் சேதமடைந்தன.
கூட்டம் எங்கே நடைபெற உள்ளது ?
ரோம், ஹங்கேரி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இடங்கள் இந்த சந்திப்பிற்காக பரிசீலிக்கப்பட்டதாக செய்திகள் பரவியிருந்தாலும், இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அமெரிக்க அதிபருக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.
வெள்ளிக்கிழமையன்று மாலை, டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், புதினுடன் நடைபெறவுள்ள, "அதிகம் எதிர்பார்க்கப்படும் சந்திப்பு" ஆகஸ்ட் 15 அன்று "பெரிய மாகாணமான அலாஸ்காவில்" நடைபெறும் என்று பதிவிட்டுள்ளார்.
"மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்," என்றும் கூறிய டிரம்ப் ,
சந்திப்பு நடக்கவுள்ள இடம் "பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமானது" என்றும் கூறியிருந்தார்.
அலாஸ்காவில் அவர்கள் சந்திக்கவுள்ள சரியான இடம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
யுக்ரேன் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறதா?
அதற்கு சாத்தியமில்லை என்பது போலத் தெரிகிறது. ஆனால், இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக இருந்தால், டிரம்ப், புதின் மற்றும் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் மற்றொரு சந்திப்பு நடைபெறலாம் என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதின் மற்றும் டிரம்பைத் தவிர, இந்தச் சந்திப்பில் வேறு யார் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
பல மாதங்களாக, ஜெலன்ஸ்கி ஐரோப்பாவிற்கு பேச்சுவார்த்தைகளில் இடம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார், ஏனெனில் அது ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான அணுகுமுறையை உருவாக்கும் என அவர் நம்புகிறார்.
"போர் ஐரோப்பாவில் நடைபெறுகிறது. யுக்ரேன் ஐரோப்பாவின் ஒரு முக்கிய பகுதி. நாங்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். எனவே, ஐரோப்பா இந்த முக்கிய செயல்முறைகளில் பங்கேற்க வேண்டும்"என்று ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.
இந்த வாரம், டிரம்பும் ஜெலன்ஸ்கி ஒருவரையொருவரும், அவர்களது ஐரோப்பிய நண்பர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளனர்.
ரஷ்யாவில் தனது சிறப்புத் தூதர் புதினைச் சந்தித்த பிறகு, டிரம்ப் ஐரோப்பியத் தலைவர்களுடன் பேசினார். சாத்தியமான சமாதான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த புதினைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று, டிரம்புடன் "மிகச் சிறப்பான உரையாடல்" நடந்ததாக யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
அந்த உரையாடலில், ரஷ்யா "தங்களது கொடூரமான தாக்குதல்களை" மேலும் தீவிரப்படுத்தி வருகிறது என அவர் டிரம்பிடம் தெரிவித்தார்.
யுக்ரேனின் பங்களிப்பு இல்லாமல் ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் எந்த சமாதான ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என ஜெலன்ஸ்கி முன்பே கூறியிருந்தார்.
மேலும், அடுத்து நடக்கவிருக்கும் டிரம்ப்–புதின் சந்திப்பு குறித்து, யுக்ரேன் இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.
யுக்ரேனின் ஐரோப்பியக் கூட்டாளிகளான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (இடது) மற்றும் பிரிட்டனின் பிரதமர் கீயர் ஸ்டார்மர் (வலது) — அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அவர்கள், யுக்ரேன் சமாதான பேச்சுவார்த்தைகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
யுக்ரேனின் நட்பு நாடுகள் என்ன சொல்கின்றன?
ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தைகளும் யுக்ரேனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி அடங்கிய முத்தரப்புச் சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக உள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது வரை, இந்த சந்திப்பு டிரம்ப்–புதின் இருவருக்கிடையிலானதாக மட்டுமே உள்ளது. ஏனெனில் அதற்கான கோரிக்கை ரஷ்ய அதிபரிடமிருந்து வந்தது.
யுக்ரேன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் "பலனற்ற முடிவுகள் தான்" என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியை, புதினைச் சந்திப்பதன் மூலம் தொடங்க முடியும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
அதனை, "ரஷ்யாவுடன் தொடங்க" திட்டமிட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் ஒரு முத்தரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்வதில் "எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது" என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதின் இதை ஏற்பாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அவர் இதற்கு முன் பல நேரடி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை மறுத்துள்ளார். மேலும், முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய 3 ஆண்டுகளாக, புதினும் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை.
அந்தச் சந்திப்பில் இரு தரப்பும் என்ன எதிர்பார்க்கின்றன?
டிரம்ப் தனது நோக்கத்தை தெளிவாக கூறியுள்ளார். போரை நிறுத்த வேண்டும் என்பது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
"கொலைகளை நிறுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று அவர் இந்த வாரமும் கூறினார்.
ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் "மிக நெருக்கமாக" உள்ளது என டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.
ரஷ்யாவும் யுக்ரேன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று கூறினாலும், அவர்கள் விரும்பும் விஷயங்கள் ஒருவருக்கொருவர் எதிரானதாக உள்ளன.
தான் கைப்பற்றிய பகுதிகளில் குறிப்பாக கிரிமியா போன்ற பகுதிகளில், ரஷ்யக் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் யுக்ரேன் உறுதியாக உள்ளது.
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த கருத்தை முழுமையாக நிராகரித்துள்ளார். "இங்கு பேசுவதற்கு எதுவும் இல்லை. இது நமது அரசியலமைப்புக்கு எதிரானது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், புதினும் தனது அதிகபட்ச கோரிக்கைகளில் இருந்து இதுவரை விலகவில்லை . அதாவது, யுக்ரேனின் நிலப்பரப்புகள், நடுநிலையான அணுகுமுறை, மற்றும் எதிர்காலத்தில் ராணுவத்தின் அளவு ஆகியவற்றில் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றவில்லை.
யுக்ரேன் மேற்கத்தியமயமாகி வருகிறது என்ற நம்பிக்கையால், புதின் அந்நாட்டின் மீது படையெடுத்தார். மேலும், மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோ, ரஷ்ய எல்லைக்கு அருகில் படைகளை கொண்டு வர யுக்ரேனைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேன் பகுதிகள்
ஆனால் எப்படியாவது, ஒரு சாத்தியமான திட்டத்தின் மூலம் இரு தரப்பையும் சமாதானப்படுத்த வெள்ளை மாளிகை முயற்சிக்கிறது.
யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய தலைவர்களை சமாதானப்படுத்த, டிரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருகிறது என பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த வட்டாரத்தின் படி,
இந்த ஒப்பந்தம்,
"இரு தரப்புக்கும் பயனுள்ளதாக சில பிரதேசங்கள் இடமாற்றம் செய்யப்படும். ஆனால் அதைப் பற்றி பின்னர் அல்லது நாளை பேசுவோம்" என்று டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!