அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள்.
28 May, 2026
நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் ஒன்றை தயாரித்து டுபாயில் அறிமுகம் செய்துள்ளது.
தங்க தகடுகளால் ஆன இந்தக் கார் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது. நிஸானின் ஆர் 35 ஜி.டி.ஆர். (R35 GT-R.) மொடலான இது ஒரு பந்தய கார் ஆகும். இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர். இந்த கார் அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் படைத்தது. இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங்களின் போது அதற்கேற்ப வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். டுபாயில் தற்போது குல் ரேசிங் மற்றும் ஓட்டோ மெக்கானிக் டுபாய் - 2016 கண்காட்சி நடைபெறுகிறது. அதில் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கார் பார்வையாளர்கள் அனைவரையும் மிக வெகுவாக கவர்ந்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!