news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ட்ரோன் கமெராக்கள் கண்காணித்தன – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது

12 Nov, 2020
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!