உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
விலை உயர்ந்த பட்டுகள் மற்றும் கை வேலைப்பாடுகள்! இங்கு காட்டப்பட்டுள்ள புடவை அவரின் மாஸ்டர் பீஸ் கலெக்ஷன்களில் ஒன்றாகும்.
குறிப்பாக இந்த சேலையானது ஜர்தோசி, சிக்கன்காரி, படோலா ரேஷம், கிரிஸ்டல், சீக்வென்ஸ் கூடிய ஹேண்ட் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோல்டன் லெஹங்கா சோளியின் பார்டர் ஆரஞ்சு - கோல்டன் நிறத்தில் ஆரஞ்சு நிற பட்டு ரவிக்கை மற்றும் கிளாம்ஷெல் வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டாவுலாவால் துப்பட்டா தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த லெஹங்காவின் விலை லட்சங்களில் இருக்கலாம், அதனால் தான் அவரது தோற்றம் பாலிவுட்டின் கதாநாயகிகளுக்கு இணையான லுக்கை அவருக்கு கொடுத்துள்ளது.
நீதா அம்பானி விலை உயர்ந்த லெஹங்கா அல்லது சேலை அணிவது இது முதல் முறை அல்ல. அவர் தனது விலையுயர்ந்த மற்றும் ஸ்டைலான ஆடைகளுக்காக பல முறை தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்துள்ளார்.
கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புடவை! நீதா அம்பானி உலகின் மிக விலையுயர்ந்த புடவையை அணிந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
நீதாவின் லெஹெங்காக்கள் மற்றும் புடவைகளுடன் அணியும் பிளவுஸ்கள் கூட விலை உயர்ந்தவையாக இருக்கும்.
அதிலும் தங்கக் கம்பிகள், விலையுயர்ந்த ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு அவரது ரவிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அவர் அரசு குடும்பத்தின் ராணி போல தோற்றமளிக்கிறார்.
40 லட்சம் மதிப்புடைய புடவை! அகமதாபாத்தில் நடந்த ரிலையன்ஸ் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிஇஓவின் மகனின் திருமணத்திற்காக நீதா அம்பானி இந்த சேலையை அணிந்திருந்தார்.
இந்தப் புடவையை வடிவமைத்தவர் சென்னை சில்க்ஸ் இயக்குநர் சிவலிங்கம். புடவையின் பின்புறம் நாதத்வாரா அல்லது கிருஷ்ணர் இடம்பெற்றுள்ளனர்.
கிருஷ்ணரின் உருவம் பலவிதமான வண்ணங்கள் மற்றும் சிக்கலான எம்பிராய்டரி மூலம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இப்புடவையில் மரகதம், ரூபி, புக்ராஜ், பூனைக்கண், முத்து போன்ற விலையுயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.
நிச்சயதார்த்த புடவை! நிதா அம்பானி தனது மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய விழாவிற்கு குஜராத்தி பாணியில் அணிந்திருந்தார்.
இந்தப் புடவையை ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லாவால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இதில் சிவப்பு - மெரூன் பிரைடல் லெஹங்காவை அணிந்திருந்தார், அதை அவர் இதனுடன், 5 நூல்கள் கொண்ட அழகிய முத்து குந்தன் நெக்லஸை நீதா அணிந்திருந்தார். இந்த லெஹங்காவின் விலையும் லட்சங்களில்தான் உள்ளது.
ஆகாஷ் & இஷா அம்பானி திருமணம்! நீதா அவர்களின் மகனாக ஆகாஷ் அம்பானியின் திருமண விழாவன்று அவர் அணிந்திருந்த சேலையும் செய்திகளில் இடம்பெற்றது.
இச்சேலையை நீதா அம்பானியின் டிசைனர் சப்யாசாச்சி முகர்ஜியால் வடிவமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இஷா அம்பானியின் திருமணத்திற்கு இவர் அணிந்திருந்த ஊதா மற்றும் நீல நிற லெஹங்காவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதில் ஜர்தோசி வேலைப்பாடுடன், சில்வர் சல்மா - சிதாரா டப்கா போன்றவற்றின் வேலைகள் இந்த வெல்வெட் லெஹங்காவில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!