சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
தங்கராஜு சுப்பையாவின் சகோதரி லீலாவதி சுப்பையா (மனுவுடன் இருப்பவர்), ஏப்ரல் 23ஆம் தேதி சிங்கப்பூரில் கருணை மனுவுடன் அதிபர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.
டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் தங்கராஜுவுக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய் விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார்.
சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது. அதை விநியோகிக்கும் நபர்களுக்கு குறைவான தண்டனைகள் விதிக்கப்படும்.
இந்த வழக்கில் தங்கராஜுவின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜு தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார்.
இதனால் மென்மையான தண்டனைக்கு தங்கராஜு தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
செயல்பாட்டாளர்கள் கவலை
தங்கராஜுவுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான போதிய அணுகல் வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைப் பெற முடியாமல் போனதால் தனது கடைசி மேல்முறையீட்டை தங்கராஜுவே வாதிட வேண்டியிருந்தது என்றும் செயல்பாட்டாளர்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.
ஆனால், இந்த வழக்கு விசாரணையின்போது தான் தங்கராஜு மொழிபெயர்ப்பாளரைக் கோரினார் என்றும் அதற்கு முன்பாக அவர் அதை கோரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றபடி வழக்கின் அனைத்து விசாரணை நடைமுறைகளின் போதும் அவருக்கு சட்ட உதவி கிடைத்தது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
2022 ஆம் ஆண்டு அறிவுத்திறன் குறைபாடு உடைய நாகேந்திரன் தர்மலிங்கம் வேறொரு வழக்கில் தூக்கிலிடப்பட்டார். அந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த சர் ரிச்சர்ட் பிரான்சன், தங்கராஜுவின் வழக்கு "பல நிலைகளில் அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறுகிறார்.
ஒரு வலைப்பதிவு இடுகையில், சிங்கப்பூர் "சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளின் 'பின்னணியில்' ஒரு நிரபராதியை கொல்லப் போகிறது" என்று ரிச்சர்ட் கூறியுள்ளார்.
"சிங்கப்பூரின் நற்பெயருக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வழக்கம், ஒரு அழியாத கறையாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பற்ற தண்டனையை (மரண தண்டனை) நிறைவேற்றுவது பிரச்னையை மேலும் மோசமாக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரிச்சர்ட்டின் குற்றச்சாட்டுகளை மறுத்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், அவரது கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் "சிங்கப்பூர் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பை அவர் அவமதிக்கிறார்" என்றும் குற்றம்சாட்டியது.
சிங்கப்பூரை பாதுகாப்பாக்கும் அரசின் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை "ஒரு முக்கிய அங்கம்" என்றும் உள்துறை கூறுகிறது.
சிங்கப்பூர் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் குழுவான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) செய்தித் தொடர்பாளர் கிர்ஸ்டன் ஹான், இந்த விஷயத்தில் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாக விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
"சர்வதேச அரங்கிலும் ஐ.நா.விலும் சிங்கப்பூர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில், குடிமக்களின் பெயரால் மக்களைக் கொல்லும் உரிமையைப் பாதுகாப்பது சிறப்பானது என்பதற்காக அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டியதில்லை," என்று அவர் கூறினார்.
அண்டை நாடுகளில் என்ன நிலைமை?
சிங்கப்பூரின் கடுமையான விதிகள் அதன் அண்டை நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முரணாக உள்ளன.
தாய்லாந்து அரசாங்கம், கஞ்சா வர்த்தகத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதே நேரத்தில் மலேசியா கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை விதித்தலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தங்கராஜுவின் குடும்பத்தினர், தூக்கிலிடப்படும் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானதையடுத்து, சாங்கி சிறையில் கண்ணாடி கூண்டுக்கு பின்னால் இருந்து தங்கராஜுவை சந்திக்க முடிந்தது," என்று தெரிவித்தனர்.
"அவர் என் அம்மா உடைந்து விடுவதை விரும்பாததால், துணிச்சலுடன் இருப்பதாக காட்டிக் கொண்டார்," என்று தங்கராஜுவின் மருமகள் சுபாஷினி இளங்கோ கூறினார்.
"இந்த நாள் வருவதற்கு அவர் மனதளவில் தயாராகிவிட்டார். இந்த வழக்கில் தனக்கு பெரிய அநீதி இழைக்கப்படுவதை அவர் உணர்கிறார். செய்யாத காரியத்துக்காக அவர் தூக்கிலிடப்படுவார்," என்று அவர் தெரிவித்தார்.
தங்கராஜுவின் மரணம், தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
"என் அண்ணனுக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கலாம். அது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. அதனால் தொடர்ந்து போராடுவேன், என்கிறார் தங்கராஜுவின் சகோதரி லீலா.
கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து தங்கராஜுவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா என்ற ஏக்கத்தில் அவர்கள் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!