வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
25 Oct, 2026
11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் எடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வகுப்புக்குள் சென்ற மதன்குமார் `என்னை திருமணம் செய்து கொள்ள முடியாதுனு சொல்லிட்டீயா?’னு கேட்டுள்ளார். `
உன்னை யார் க்ளாஸ்க்கு வர சொன்னது?’னு ரமணி கேட்டதாக தெரிகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமார், ரமணி கழுத்தும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
அப்படியே சரிந்து விழுந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதைபார்த்து மாணவர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர்.
இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஸ், ``தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!