news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தனது திருமணத்துக்கான பணத்தை தேடிக்கொள்ள தாயின் உதவியுடன் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்!

27 Feb, 2024
தனது திருமணத்துக்குத் தேவையான பணத்தைத் தேடிக் கொள்வதற்காக கஞ்சா விற்பனை செய்த ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாரும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. 24 வயதுடைய சந்தேக நபருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முறையான வழியில்லாததால் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட 5 இலட்சம் ரூபாவை கொடுத்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தமையும் தெரியவந்துள்ளது. இவ்வாறு வாங்கிய கஞ்சாவை தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளமையும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!