ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்' - சௌதியின் கடுமையான சட்டங்கள் ஒரு பார்வை
21 Oct, 2026
2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை
ட்ரெவர் போலவே அண்மைகாலமாக இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் சமூக ஊடகங்களில் அதிக லைக் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆபத்தான சாகசங்கள் செய்யப்படுகின்றன.
அவை சில நேரங்களில் உயிரிழப்பில் சென்று முடிகின்றன.
இந்த மாத தொடக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த யுடியூபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
22 வயதான அகஸ்தியா சௌகான் தனது புதிய சூப்பர் பைக்கை வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முற்படும் போது நடந்த விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யுடியூபர் TTF வாசன் உள்ளிட்ட சிலர் மீது சாலை விதிகளை மீறி பைக்கில் வேகமாக சென்று வீடியோ எடுத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி சாகசங்களில் ஈடுபட்டு அதை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியிட்ட சில கல்லூரி மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியது சென்னை போக்குவரத்து காவல்துறை.
'மக்களை ரசிக்க வைக்க எல்லை மீறுகின்றனர்'
யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடும் பலரும் தொடக்கத்தில் மிகுந்த ஈடுப்பாடுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் நாளடைவில் இதிலிருந்து மாறிவிடுவிடுகின்றனர் என்று பிபிசி தமிழிடம் பேசிய யுடியூபர் தீபன் சக்ரவர்த்தி குறிப்பிட்டார்.
"தங்கள் திறமைகளை காட்டி மக்களை ஈர்க்கும் யுடியூபர்கள், பிரபலமான பிறகு மக்களை தங்கள் பக்கம் தொடர்ந்து தக்கவைக்க,
லைக், வியூஸ் வாங்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என கருதி இப்படி செய்வதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன." என்றார்.
தொடர்ந்து பேசிய தீபன், குறுகிய காலத்தில் கிடைக்கும் புகழை கையாளும் முதிர்ச்சி இல்லாத இளம் வயதினர் பலரும் இதுபோன்ற சாகசங்களை செய்து பிரச்னைகளில் சிக்குகின்றனர் என்று தெரிவித்தார்.
யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இப்படியான சாகசங்களில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த எந்த வரைமுறையும் இல்லை.
விதிமீறலில் ஈடுபட்டு பிரச்னை ஏற்படும் போது மட்டும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு செயல்படுகிறோம் என்று அறிவிக்கும். இந்த நிலை மாறவேண்டும் என்கிறார் யுடியூபர் தீபன் சக்ரவர்த்தி.
புகழ் போதை
ஒரே வீடியோவில் வைரலாகி, ஆன்லைன் சமூகத்தால் கொண்டாடப்படுவதால் கிடைக்கும் புகழ்ச்சிக்கு அடிமையாகி அதை தக்க வைக்க இதுபோன்ற மோசமான செயல்களை செய்ய சிலர் துணிந்து விடுகின்றனர், என்று பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த் தெரிவித்தார்.
இப்படியான ஆபத்தான சாகசங்களை அனைவரும் செய்யமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே செய்கின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் அடுத்தவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாக தெரியவேண்டும் என்று நினைத்து சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படி செய்வதால் கிடைக்கும் 'த்ரில்' அவர்களுக்கு ஒரு அனுபவத்தை தருகிறது, என்றார்.
சாகச செயல்களில் ஈடுபடும் போது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் என கேட்டபோது, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் போது அட்ரினலின், டோபமைன் போன்ற சுரப்பிகளில் சுரக்கின்றன.
குறிகிய நேரத்திற்கு இது தரும் உணர்வுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். இதுவும் போதை மருந்து போன்ற ஒர் அடிமை மனநிலைதான் என்று பதிலளித்தார் மருத்துவர் சித்ரா.
நடுத்தர மற்றும் வயதான நபர்களை விட பதின்ம வயதினர், இளம் பருவத்தினரிடையே இப்படியான மனநிலை அதிகமாக இருக்கிறது.
இளம் வயதினரிடையே காணப்படும் இந்த அதீத ஆற்றலை பயனுள்ள வழியில் மடைமாற்றி பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யமுடியும். அதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் உடனிருந்து வழிகாட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!