யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்
24 Mar, 2026
வரக்காபொல பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை சம்பூர் பகுதியை நோக்கி ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படையின் பஸ்கள் இரண்டுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தையடுத்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!