news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தனிப்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை : சந்தேக நபர் கைது!

11 Feb, 2024
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (10) சிறிபாகம - தெற்கு மெல்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மல்வத்தை - இலுக்வத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!