தன்னைப் பிரிந்து செல்ல வேண்டாமெனக் கோரி காதலியின் காலைப் பிடித்து கெஞ்சிய இளைஞர்
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கைவிட்டுச் செல்ல வேண்டாம் எனக் கோரி, வீதியில் வைத்து தனது காதலியின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஜியாங்ஸு மாகாணத்தின் ஹுவாய் நகரின் பிரபல ஷொப்பிங் வலயமொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த இளைஞனுடனான காதலை முறித்துக்கொள்வதற்கு அவரின் காதலி தீர்மானித்த நிலையில், காதலியை தக்க வைத்துக்கொள்வதற்கான கடைசி முயற்சியாக அவர் இந் நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையான மக்கள் அங்கு காணப்பட்ட நிலையில், மேற்படி இளைஞன் தனது காதலியின் காலைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த மக்கள் பலரும் வியப்படைந்தனர்.
இக் காட்சியை சிலர் படம்பிடித்து இணையத்திலும் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக மேற்படி இளைஞனின் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
அந்த இளைஞனின் முகத்தில் பல தடவை தாக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் மேற்படி யுவதி.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!