news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு புதிதாக கொரோனா - 27 பேர் பலி

27 Oct, 2020
தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 029 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 75ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!