news@ilakkiyainfo.com

பிரிவுகள்

"தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்",

10 Mar, 2024
"விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார் நடிகர் விஜய். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்படுகின்றனர் என அறிவித்த விஜய் முதல் உறுப்பினராக கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8-ம் தேதி சிறப்பு செயலி மூலம் தொடங்கியது. தொடங்கிய 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!