நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்து வருகின்றனர்.
நடிகை சாயாசிங், நடிகரான கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
ஜெனிலியா மற்றும் ரித்தேஷ்
தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான ஜெனிலியா, இந்திய நடிகரான ரித்தேஷ் என்பவரை மணந்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருமே பாடகர்கள். இவர்கள் இருவருமே பல வருடங்களாக காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.
நஸ்ரியா மற்றும் பகத் பாசில்
சமீபத்தில் தான் நடிகை நஸ்ரியா மற்றும் நடிகரான பகத் பாசிலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சற்று சர்ச்சையாகவே உள்ளது. ஏனெனில் இவர்களது திருமணம் காதல் திருமணம் இல்லை என்று நஸ்ரியாவின் தந்தை கூறியுள்ளார்.
இது நம்பமுடியாதவாறு தான் உள்ளது. இருப்பினும் இவர்கள் திருமணத்திற்கு பின்னர் சந்தோஷமாக வாழ்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!