news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர் விபரம் வெளியானது!

11 Aug, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே. அபேசேகர, என்.ரத்னஜீவன் எச்.ஹூல் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதில் ஏனைய கட்சிகளிலிருந்து தெரிவாகியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!