தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ முன்பதிவு வசூல் – பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இது விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் மீது ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2026 ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
முன்பதிவு வசூல்
விஜய்யின் படங்கள் என்றாலே முன்பதிவு வசூல் அமோகமாக இருக்கும். அதிலும் அவரது இறுதி படம் என்பதால், ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கியதிலிருந்தே வேகமாக நடைபெற்று வருகிறது.
ரிலீஸுக்கு இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வெளிநாடுகளில் நடந்த முன்பதிவில் மட்டும் ரூ. 4.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது படம் வெளியாகும் முன்பே ரசிகர்களின் ஆதரவை தெளிவாக காட்டுகிறது.
எதிர்பார்ப்பு
வலுவான அரசியல் பின்னணி, தளபதியின் திரை வாழ்கையின் இறுதி படம் என்ற உணர்வு, மற்றும் ரசிகர்களின் பேராதரவு ஆகியவை இணைந்து ‘ஜனநாயகன்’ படத்தை 2026 ஆம் ஆண்டின் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் நிகழ்வாக மாற்றும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இனி வரும் நாட்களில் முன்பதிவு வசூல் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், வெளியீட்டின் போது பல சாதனைகள் முறியடிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!