விரைவில் பாரிஸ் 'ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும்' -என்ற டொனால்ட் டிரமின் கருத்து முட்டாள் தனமானது! மக்ரோங் விமர்்சனம்
22 Oct, 2026
சாப்பாட்டு விஷயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்காக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள லீம்கெட் இன்ஃபைனைட் எனும் கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம், தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக முன்கூட்டியே இணையம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு அறிவித்தது. அந்த உணவகத்தின் கடல் உணவுகளை குறைந்த விலையில் பெறுவதற்காக சுமார் 20 ஆயிரம் பேர், 50 மில்லியன் தாய் பட் (இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்) மதிப்பிலான வவுச்சர்களை இணையம் மூலம் வாங்கினார்கள் என்று தாய்லாந்திலுள்ள செய்தி நிறுவனமான பிபிஎஸ் தெரிவிக்கிறது. ஆனால் தங்களுக்கான தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அதைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும் கூறி அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அபிசார்ட் பவோன்பன்சாரக் மற்றும் ப்ரபாசன் பவோன்பன்சா ஆகியோர் அந்த உணவகத்தை மூடிவிட்டனர். பணம் செலுத்தி ஏமாந்த நூற்றுக்கணக்கானவர்கள் புகார் அளித்த பின்பு அதன் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்தில், அதிக எண்ணிக்கையில் பெறப்படும் புகார்கள் தொடர்பான வழக்குகளில், இவ்வாறு நூறு ஆண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் என்று தண்டனை விதிக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனாலும் பொது மக்களை ஏமாற்றிய குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக அந்த நாட்டு சட்டப்படி 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழிக்க முடியும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!