தாய் இரத்த வெள்ளத்தில்...மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாயை தாக்கிய மகன்!
வயோதிபத் தாயொருவரை அவரது மகனும் மேலும் மூவரும் சேர்ந்து தாக்கியதால் படுகாயமடைந்த தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.
கணபதி நகர் ரமேஷ்புரத்தைச் சேர்ந்த 58 வயதான மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது தாய் தனது சகோதரனால் தாக்கப்பட்டமை பற்றி முறைப்பாடு தெரிவித்துள்ள அருமைத்துரை வினோதினி (வயது 30) கூறியதாவது,
சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு கடந்த வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான எனது சகோதரன் சுவேந்திரன் (வயது 32) உடனடியாக எனது வீட்டுக்குள் புகுந்து எனது தாய் தனியாக இருந்த வேளையில் தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
கோயிலுக்குச் சென்றிருந்த நான் வீடு திரும்பிய போது தாய் இரத்த வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார்.
உடனடியாக தாயை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எமது தாயைத் தாக்கிய எனது சகோதரன் உதவியாக மேலும் மூவரை அழைத்துக் கொண்டு வந்து தாயைத் தாக்கியிருப்பது தெரியவந்திருக்கிறது என்றார்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மனைவியை தாக்கிக் காயப்படுத்திய பின்னர் வேறு பெண்ணுடன் தலைமறைவானவர் கைது!
மூதூர், கிளிவெட்டி பகுதியில் மனைவியைத் தாக்கி காயப்படுத்திவிட்டு வேறொரு பெண்ணுடன் தலைமறைவானவரை நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதன்கிழமை மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பகுதியில் திருமணம் முடித்து ஒரு பிள்ளை கிடைத்தவுடன் சந்தேக நபர் மனைவியுடன் சண்டையிட்டு வந்த நிலையில் மனைவியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய பின்னர் வேறொரு பெண்ணுடன் தலைமறைவாகி வாழ்ந்த நிலையில் மனைவியால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவரை மூதூர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!