news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அண்ணன் “அயன் பொக்ஸால்’’ அடித்துக் கொலை: முல்லைத்தீவில் சம்பவம்! (வீடியோ செய்தி)

13 Apr, 2015

தாய் கொடுத்த புத்தாடை பகிர்வதில் அண்ணன் தம்பி இடையே நடந்த  மோதலில் அண்ணன்  அயன் பொக்ஸால்’’ அடித்து கொலை செய்யப்பட்டார்.

புதுவருடத்திற்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பரிந்து கொள்வதில் மகன்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த துரதிஸ்டவசமான செய்தி தாய் கொடுத்த புத்தாடை பகிர்வதில் அண்ணன் தம்பி இடையே மோதல்: - முல்லியாவெலி கண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் மூத்த சகோதரர் (19 வயது) கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்திய இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!