news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தாய், தம்பியை வீட்டில் கொன்றுவிட்டு-பாடசாலை சென்று 6 பேரை சுட்டுக் கொன்ற திருநங்கை -கனடா சம்பவத்தில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

13 Feb, 2026
கனடாவின் பிரிட்டிஷ் கொலம் பியா மாகாணத்தில் டம்ளர் ரிட்ஜ் பாடசாலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாண விகள், 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலை நடத்தியவர் ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 18 வயது திருநங்கையான இவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் ஆவார். துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ் ஸி, முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பி யைச் சுட்டுக் கொன்றுள்ளார். அதன் பின்னரே தான் முன்பு பயின்ற 'பா' சாலைக்குச் சென்று தாக்குதல்நடத்தியுள்ளார். தாக்குதலுக்குப் பின் ஜெஸ்ஸி பாடசாலை நூலகத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண் டார். இவரையும் சேர்த்து இந்த சமபவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆணாகப் பிறந்த ஜெஸ்ஸி, தன்னை திருநங்கையாக அடை யாளபப்படுத்தி கொண்டார். சமூக அழுத்தம் காரணமாக அவருக்குக் மனநல பிரச்சினைகள் இருந்ததா கவும், முன்னதாக பல்வேறு சந்தர்ப் பங்களில் பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று வெவ்வேறு கார ணங்களுக்காக விசாரணை நடத்தி யுள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே உயிரிழந்தவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் வித மாக, அரசு அலுவலகங்களில் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார். கனடாவில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவா கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!