ஏறாவூரில் தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை பலி
27 Oct, 2026
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் வட மாகாண ஆலுநர் சாள்ஸ் ஆகியோர்களாலௌ வெகு விரைவில் இச்செயற்திட்டத்தை நிறைவுசெய்து கையளித்தமைக்கான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
அதாவது இது சமவெளி பிரதேசமான யாழ்ப்பாணம், குடிநீர் விநியோகத்திற்காக நிலத்தடி நீரிலே பிரதானமாகத் தங்கியுள்ளது. எனினும், அதிகளவு நீர் இறைத்தல், விவசாய இரசாயனப் பாவனை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் குறித்த நிலத்தடி நீர் மாசுபடுகின்றது.
தேசியமட்டத்திலான சராசரி நீர் வழங்கலின் உள்ளடக்குகையான 48% உடன் ஒப்பிடும் போது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் 5% ஆக உள்ளது.
மேற்கூறிய உண்மைகளை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரினைச் சுத்திகரிக்கும் உப்புநீக்கும் ஆலை யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
தாளையடி கடல் நீரை உப்புநீக்கும் ஆலை செயற்திட்டத்தில், குறைந்த கடல் உப்புத்தன்மைக்காக தளையடியில் அமைந்துள்ள இந்த ஆலை, கடல்நீரில் இருந்து 100% பாதுகாப்பான குடிநீரைத் தயாரிப்பதற்காக மேம்பட்ட RO தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையின் மிகப்பெரிய உப்புநீக்கும் வசதியாக, இது இலத்திரனியல் செயற்பாடு, இரசாயனவியல் மற்றும் நிர்வாக முறைமைகளை ஒன்றிணைத்து, குடிநீர்த் தரத்தை வினைத்திறனுடன் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, தினசரி 24 மில்லியன் லீற்றர் குடிநீரை உற்பத்தி செய்கிறது.
இந்த உப்புநீக்கும் ஆலை நிர்மாணத்திற்கான செலவு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு ரூ. 160 ஆகும். அதே நேரத்தில் வழக்கமான நன்னீர் சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செலவு ஒரு கன மீட்டரிற்கு 40 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதாணி சாகல ரட்நாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தாகியோ கொனிஷி உள்ளிட்ட வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்,
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், ஏனைய உத்தியோகஸ்த்தர்கள், விசேட விருந்தினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!