news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திடீர் மின் வெட்டு நேரத்தில் வீட்டினுள் நுழைந்தவர்களால் கொள்ளை

11 Dec, 2023
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டில் கண்டி - யட்டிஹலகல பிரதேசத்தில் உள்ள வீட்டொன்றிற்குள் நுழைந்து திருடிய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று பத்துமணி நேரத்திற்குள் சந்தேக நபர் ஹலதெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் கொள்ளையிட்ட தொலைக்காட்சி பெட்டி மற்றும் கிரைண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!