news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திருமணமாகி இரண்டு மாதங்களான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

14 Feb, 2023
மட்டுவில் - கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமணமாகி இரண்டே மாதங்களான தெல்லிப்பழையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சயந்தன் (வயது- 29) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரும் , அவரது சகோதரனும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்று, அங்கிருந்து திரும்பி வரும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான சகோதரர்கள் இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!