news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திருமணம் செய்ததால் பணிநீக்கம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 60 லட்சம் இழப்பீடு... உச்சநீதிமன்றம் உத்தரவு

21 Feb, 2024
திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!