நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!
24 Oct, 2026
ஆலியா பட்
திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தன் தொழில் மீது உள்ள ஆர்வத்தினை ஆலியா வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது அடுத்த படம், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி விரைவில் வெளிவர இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரன்பீரை கரம் பிடித்த பின்னர் முதன்முறையாக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே அடியெடுத்து வைத்துள்ளார். இதுபற்றிய புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகி வருகிறது.
அவர் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் என தெரிந்ததும் விமான நிலையத்திற்கு புகைப்படக்காரர்கள் குவிந்து விட்டனர்.
தொள தொளவென பிங்க் நிற உடையில், கையில் சிறிய பை ஒன்றையும் வைத்து கொண்டு புகைப்படக்காரர்களுக்கு புன்னகையுடன் டாட்டா காண்பித்து புறப்பட தயாரானார்.
அவரது கையில் திருமண மோதிரமும், காய்ந்த சுவடு மாறாத மெகந்தியும் காட்சியளித்தன. இதன்பின் பத்திரிகையாளர்கள் கேட்டு கொண்டதற்காக நின்று போஸ் கொடுத்து விட்டு சென்றார்.
இந்த படப்பிடிப்புக்காக ஆலியா தவிர்த்து, பேஷன் டிசைனர் மணீஷ் மல்கோத்ரா, பட தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை ஷபானா ஆஸ்மி ஆகியோரும் வந்திருந்தனர்.
படத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், தர்மேந்திரா மற்றும் ஜெயாபச்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஆலியா பட் போன்றே தொழில் பக்தி கொண்ட அவரது கணவர் ரன்பீர் கபூரும் கடந்த ஞாயிற்று கிழமை தனது பணிநிமித்தம் காரணமாக டி-சீரிஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!