news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திருமண விருந்து வைபவத்தில் மணமகனை மிதக்க வைத்த மணமகள்-(வீடியோ)

14 Sep, 2015
 

தம்பதியொருவரின் திருமண விருந்து வைபவத்தின் நடனத்தின்போது, மணமகனை மணமகள் அந்தரத்தில் “மிதக்க” வைத்து காட்டிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மெஜிக் நிபுணரும் நகைச்சுவையாளருமான ஜஸ்டின் வில்மன் மற்றும் புகைப்படக்கலைஞரான ஜிலியன் சிப்கின்ஸும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களின் திருமண விருந்து வைபவம் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்விலும் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில் மெஜிக் சாகசமொன்றை இத்தம்பதியினர் நிகழ்த்திக் காட்டினர்.

12066Jill_Justin3இவர்கள் இருவரும் நடனமாடுவதற்கு வந்தபோது, மணமகன் ஜஸ்டின் வில்மனை அந்தரத்தில் மிதக்க வைத்துக் காட்டினார் மணமகள் ஜிலியன் சிப்கின்ஸ்.

12065Jill_Justin25ஆனால், ஏனைய மெஜிக் நிபுணர்களைப் போலவே, இந்த சாகசம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற இரகசியத்தை ஜஸ்டின் வில்மனோ ஜலியனோ வெளியிடவில்லை.

ஆனால், இதற்காக தாம் இருவரும் பல மணித்தியாலங்கள் பயிற்சிகளை மேற்கொண்டதாக ஜஸ்டின் வில்மன தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு தாம் எதிர்பார்த்ததைவிட சுவாரஷ்யமாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!