சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
தி.மு.க என்றால் எம்.ஜி.ஆர்., கறுப்பு சிவப்பு என்றால் எம்.ஜி.ஆர் என்ற அளவுக்கு தி.மு.க-வின் முகமாக எம்.ஜி.ஆர் விளங்கிய காலம் அது.
1971 தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார் எம்.ஜி.ஆர். ஒருமுறை நடிகர் தேங்காய் சீனிவாசனை உடன் அழைத்துச்செல்கிறார். காரில் செல்லும்போது தேங்காய் சீனிவாசன் நெளிந்துகொண்டேயிருக்கிறார். ‘
என்ன சீனிவாசன் உடம்பு சரியில்லையா?’ என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர். ‘அதெல்லாம் இல்லை. காலடியில் ஒரு மூட்டை இருக்கிறதே… அது என்ன?’ என்று கேட்ட சீனிவாசனிடம், ‘பிரித்துப் பாருங்களேன்...’ என்று எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
மூட்டையைப் பிரித்தால், ஒரே ஆச்சர்யம். அவ்வளவும் ரூபாய் நோட்டுகள். தேங்காய் சீனிவாசன் அதிர்ந்துபோகிறார். ‘ஒன்றுமில்லை. இரண்டு நாள்களில் மூன்று மாவட்டங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.
ஐம்பது கூட்டங்களுக்கு மேல் பேசவேண்டியிருக்கிறது. இந்தப் பணமெல்லாம் கட்சி செலவுக்காகத்தான். தேர்தலில் நாம் அதிக இடங்களைப் பெற வேண்டுமல்லவா…’ என்று எம்.ஜி.ஆர் கண்சிமிட்டுகிறார்.
இப்படி, மூட்டைகளில் பணத்தை எடுத்துச் சென்று கட்சிக்குச் செலவு செய்பவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.
1971 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க பெறுகிறது. கருணாநிதி அமைச்சரவையில் எம்.ஜி.ஆர் இடம்பெறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
எம்.ஜி.ஆரும் தனக்கு ‘மெடிக்கல் மினிஸ்டர்’ பதவி வேண்டும் என்று கருணாநிதியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அமைச்சர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை.
‘நடிப்புத் தொழிலில் இருப்பதால், அமைச்சர் பதவி உங்களுக்குக் கொடுப்பதில் சட்டச் சிக்கல் இருக்கிறது. உங்களை அமைச்சர் ஆக்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்...’ என்று கருணாநிதி தெரிவிக்கிறார். ஆனால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை.
1972, அக்டோபர் 17-ம் தேதி, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சி தோன்றியது. கறுப்பு சிவப்புக்கு நடுவில் அண்ணாவின் உருவம் பொறித்த கொடி உருவானது.
‘புரட்சி நடிகர்’ என்று அழைக்கப்பட்டுவந்த எம்.ஜி.ஆர்., ‘புரட்சித்தலைவர்’ ஆனார்.
அப்போது, கருணாநிதியின் எதிர்வினை என்ன தெரியுமா... ‘அவர் என்ன விரும்பினாரோ, எதற்காகத் திட்டமிட்டாரோ அது நடந்திருக்கிறது.
தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் கணக்கு தீர்க்க விரும்பினாரே அல்லாமல், கணக்கு பார்க்க விரும்பவில்லை’ என்றார் கருணாநிதி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க பக்கம் சாய்ந்தது. தி.மு.க அமைச்சர்கள்மீது ஊழல் குற்றம்சாட்டி, குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் எம்.ஜி.ஆர் புகார் மனு அளித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரமும் தி.மு.க-வுக்கு எதிரான புகார் மனுவைக் குடியரசுத் தலைவரிடம் அளித்தார்.
சட்டமன்ற சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன், அ.தி.மு.க பக்கம் சாய்ந்திருந்தார். 1972, நவம்பர் 13-ம் தேதி சட்டமன்றம் கூடியது. எம்.ஜி.ஆர் எழுந்து, ‘மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த அமைச்சரவை நீடிப்பது சரியா?’ என்று கேள்வி எழுப்பினார்.
உடனே, ‘சட்டசபையைக் கலைத்துவிட்டு, மறு தேர்தலுக்கு மக்களைச் சந்தியுங்கள்’ என்று முதல்வர் கருணாநிதியைப் பார்த்துக் கூறிவிட்டு, டிசம்பர் 2-ம் தேதிக்குச் சபையை ஒத்திவைத்தார் சபாநாயகர் மதியழகன்.
தமிழக அரசியலில் நீண்ட காலம் ஆளுமை செலுத்திய இரு பெரும் தலைவர்கள் அடுத்தடுத்து மறைந்தார்கள்.
1972, டிசம்பர் 25-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் ராஜாஜி காலமானார். பெரியாரும் ராஜாஜியும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், அவர்கள் இணைபிரியாத நண்பர்கள்.
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு வரை சென்று கண்ணீர்மல்க தன் நண்பருக்கு விடைகொடுத்தார் பெரியார். அடுத்த ஓராண்டில் அதே டிசம்பரில் பெரியாரும் காலமானார்.
1973, டிசம்பர் 24-ம் தேதி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அரசு மரியாதையுடன் பெரியாரின் இறுதிப் பயணம் நடைபெற வேண்டும் என்று முடிவுசெய்தார் முதல்வர் கருணாநிதி.
ஆனால், ‘அரசுப் பொறுப்பு எதிலும் இல்லாத ஒருவருக்கு அரசு மரியாதை அளிக்க, சட்ட விதிமுறைகளின் படி வழி இல்லை’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே,
‘காந்தி எந்த அரசுப் பொறுப்பில் இருந்தார்?’ என்று அதிகாரிகளிடம் கேட்டார் முதல்வர் கருணாநிதி. ‘பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட வேண்டும்’ என்று முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,
இதற்கென்று தனியாக அரசிதழ் வெளியிடப்பட்டது. அன்றைய தினம் துக்க நாளாக அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங் களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பெரியாரின் இறுதி ஊாவலம்
தேசியக்கொடி இரண்டு நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கப்படவிடப்பட்டது.
அண்ணா, புற்றுநோயால் காலமானார்: முதல்வர் பதவியை கருணாநிதி ஏற்றார். -. (தமிழக தேர்தல் வரலாறு-10)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!