news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தூண்டிலை எடுக்க முயன்ற இளைஞர் குளத்தில் மூழ்கி பலி! - யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் சோகம்; கடற்படையினர் சடலத்தை மீட்டனர்!

10 Dec, 2025
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில், தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்ற கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற இவர், குளத்தில் விழுந்த தூண்டிலை எடுப்பதற்காக நீரில் இறங்கியபோது மூழ்கியுள்ளார். பல தேடுதல்களுக்குப் பின்னர், கடற்படையினர் குறித்த இளைஞரின் சடலத்தை மீட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!