மாணவி வன்புணர்வு: SIக்கு 50 ஆண்டுகள் சிறை
25 Nov, 2026
ஜினாத் பாத்திமா கல்விகற்பதற்காக கொரியா வரவேண்டும் என விரும்பினார்,தன்னுடன் வாழவேண்டும் என விரும்பினார் கொரிய பல்கலைகழகத்தில் சேர்வதற்கான ஆவணங்களை பாத்திமா தயார்படுத்திக்கொண்டிருந்வேளை அவரது கனவுகள் அனைத்தும் கலைந்துபோயுள்ளன என இபாம் தெரிவித்தார்.
ஜினாத்திற்கு பெரும் குடும்பபொறுப்பிருந்தது பாத்திமா கர்ப்பிணியாகயிருந்தார், ஜினத்தின் குடும்பத்தை பராமரிக்கும் ஒரேயொரு நபர் அவரே, அவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் தந்தை நீரிழிவு நோயாளி அவரது மூத்த சகோதாரர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜினாத் பணம் உழைப்பதற்காக கொரியா வந்தார் தனது தாயின் மருத்துவதேவைகளிற்காக பணம் உழைப்பதற்காக தனது சகோதரரை வெளிநாட்டிற்கு அனுப்ப வீடொன்றை கட்ட என அவருக்கு பல கனவுகள் இருந்தன என்கின்றார் ஜினாத்துடன் இணைந்து பணியாற்றிய காதிர்.
அவர் இரவு விடுதிகளிற்கு செல்பவர் இல்லை அன்றிரவு நடப்பதற்கே வெளியில் சென்றார் என அவர் குறிப்பிடுகின்றார்.
அவர் எங்களை விட்டு செல்வதற்கான நேரம் இதுவல்ல எங்களால் நம்பமுடியவில்லை என்கின்றார் அவர்.
சனிக்கிழமை இரவு 9 மணிக்கு பின்னர் ஜினாத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்கின்றார் ரிகாஸ் மறுநாள் காலை புகையிரத நிலையமொன்றில் அவரது கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டது.
இதன் பின்னர் ஜினாத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது, என ரிகாசும் ஏனையவர்களும் தெரிவிக்கின்றனர்.
ஜினாத் எங்கிருக்கின்றார் என்பதை அறிவதற்காக ஹனாம் சனசமூகநிலையத்தை பல தடவை தொடர்புகொண்டோம் இதன் பின்னர் இலங்கை அமைப்பு ஒன்றின் மூலம் ஜினாத் மருத்துவமனையில் இருப்பதை அறிந்தோம் நாங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றே கருதினோம் எனவும் அவர் தெரிவித்தார்.
உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு உதவுவதாக இலங்கை தூதரகமும் தென்கொரிய அரசாங்கமும் தெரிவித்துள்ள போதிலும் செலவுகள் குறித்து குடும்பத்தவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!